கேப்டன் கொடுத்த நெத்தியடி: அதிர்ச்சியில் அதிமுக
மதுரை:திமுக, அதிமுகவைப் போல பண பலம், அடியாள் பலம், அதிகார துஷ்பிரயோகம், கூட்டணி பலம் என எதுவும் இல்லாமல், தன்னந்தனியாகப் போட்டியிட்டு, மதுரை மேற்குத் தொகுதியில் கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதலாக வாக்குகளைப் பெற்றுள்ளது தேமுதிக.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு உதித்த தேமுதிக முதல் தேர்தலிலேயே பெரிய அரசியல் கட்சிகளை மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு அபாரமாக வாக்குகளைப் பெற்று அதிர வைத்தது.
![]() |
அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிகவுக்கு வெற்றிகள் தொடர்ந்தன. கணிசமான ஊராட்சி அமைப்புகளையும், நிறைய கவுன்சிலர்களையும் பெற்று சாதனை படைத்தது.
இந் நிலையில் வந்தது மதுரை மேற்கு இடைத் தேர்தல். இத்தேர்தலில் அதிமுக சார்பில் ெசல்லூர் ராஜு நிறுத்தப்பட்டார். மறு முனையில் காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டார் ராஜேந்திரன்.
போட்டியிட்டது காங்கிரஸ் என்றாலும் கூட, வேலை பார்த்தது எல்லாம் திமுகவினர்தான்.
![]() |
மு.க.அழகிரியே தேர்தலில் நிற்பதாக நினைத்துக் கொண்டு மிகத் தீவிரமாக பணியாற்றினர் திமுகவினர்.
ஓட்டுக்கு இவ்வளவு என கவரில் பணம் போட்டு தந்தனர் திமுகவினர். அதிமுகவினரும் சளைக்காமல் போலி காது குத்து விழாக்கள் நடத்தி வாக்காளர்களுக்கு பிரியாணியும் போட்டு காசு தந்தனர்.
அத்தோடு திமுகவின் அதிகார துஷ்பிரயோகம் வேறு. அடியாள் பலத்தோடு அதிமுகவும் திமுகவும் புகுந்து விளையாட தேர்தல் ஆணையமே அதிர்ந்து போனது.
இதனால் தேர்தலையே நிறுத்தி வைக்கும் அளவுக்கு நிலைமையும் உருவானது. ஆனால், உண்ணாவிரத மிரட்டலைக் கொடுத்து தேர்தலை நடத்த வைத்தார் முதல்வர் கருணாநிதி.
![]() |
அதிமுக தரப்பிலும், திமுக தரப்பிலும் பணத்தை வாரி இறைத்தனர்.
ஆனால் இந்த களேபரம் எதிலுமே சிக்கிக் கொள்ளாமல் படு அமைதியாக, அதேசமயம் ஆணித்தரமாக தங்களது தரப்பு வாதங்களை வைத்து எளிமையான பிரசாரத்தில் ஈடுபட்டார் விஜய்காந்த்.
தனது மனைவி பிரேமலதாவோடு மதுரையிலேயே முகாமிட்டு தீவிரப் பிரசாரம் மேற்ெகாண்டார் விஜயகாந்த்.
![]() |
ஆடம்பர, அலங்கார வாகனங்கள் இல்லை, ஆர்ப்பரிக்கும் தொண்டர் கூட்டம் இல்ைல, காசை வாரியிறைக்கவும் வழி இல்லை.
இப்படி இக்கட்டான நிலையில் தேர்தலில் நின்றாலும் கூட மக்களை மட்டும் நம்பி, தன்னம்பிக்கையோடு தேமுதிகவினர் செய்த பிரசாரத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
திமுகவும் அதிமுகவும் காசு தந்தா வாங்கிங்குங்க.. அது உங்க காசு தான். ஊழல் செஞ்சு, கமிஷன் அடிச்சு உங்க பணத்தை சுரண்டித் தான் உங்ககிட்ட தர்றாங்க. அதை வாங்கிகிட்டு எங்களுக்கு ஓட்டு போடுங்க என மிக நேரடியாகவே விஷயத்தை மக்களின் காதில் போட்டு விஜய்காந்த் செய்த பிரச்சாரத்துக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.
கடந்த தேர்தலை விட இந்த இடைத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது தேமுதிக. அதை விட முக்கியமாக தேமுதிகவுக்கும், அதிமுகவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 8,000 சில்லரைதான்.
கிட்டத்தட்ட 2வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை நோக்கி படு வேகமாக தேமுதிக வளர்ந்து கொண்டிருக்கிறது, முன்னேறிக் ெகாண்டிருக்கிறது தேமுதிக.
சத்தம் போடாமல் மக்கள் ஆதரவை அள்ளிக் ெகாண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
கடந்த தேர்தலில் தேமுதிகவுக்கு இங்கு 14 ஆயிரத்து 527 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால் இம்முறை தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமரன் 21 ஆயிரத்ுத 272 ஓட்டுக்களைப் பெற்றுள்ளார். இது தேமுதிகவின் பெரும் வளர்ச்சியைக் காட்டுகிறது.
இரு பெரும் மலைகளுக்கு மத்தியில் சிறு துரும்பு போலத் தெரிந்த தேமுதிக இந்த அளவுக்கு ஓட்டு வாங்கியுள்ளது மதுரை வாக்காளர்களை மட்டுமல்ல தமிழகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிற கட்சிகளைப் ேபால தேமுதிகவின் பலம் பணத்தில் இல்ைல, மக்கள் மனதில்தான் இருக்கிறது என்பதை விஜயகாந்த் சத்தம் இல்லாமல் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
விஜயகாந்த் கொடுத்துள்ள இந்த நெத்தியடி திமுகவை விட அதிமுகவுக்குத்தான் பலத்த பேரிடியாக அமைந்துள்ளது.
எந்த சினிமா மாயையை வைத்து அதிமுக வளர்ந்ததோ அதே சினிமா, விஜய்காந்த் ரூபத்தில் வந்து ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சியைத் தந்து வருகிறது.
















Click it and Unblock the Notifications