ஸ்ரீஹரிகோட்டாவில் 3 தீவிரவாதிகள் கைது
சென்னை:
சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதள மைய வளாகத்தில் நுழைந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர் உள்பட 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் அங்கு தினக் கூலியாக வேலை பார்த்து வந்தனர். அவர்களில் அக்தர் அலி முல்லா, பீமால் நஷ்கர் ஆகியோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 3வது நபரான நசீர் அலி முல்லா வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மூன்று பேரின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த ஸ்ரீஹரிகோட்டா அதிகாரிகள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து மூன்று பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் மூன்று பேருக்கும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. நசீர் அலி முல்லா பாஸ்போர்ட் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குள் ஊடுறுயிருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீஹரிகோட்டாவிற்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வரவுள்ள நிலையில் 3 தீவிரவாதிகள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications