ஊட்டி-தொடர் மழையால் தொடரும் நிலச்சரிவு
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
கடந்த 2 வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஊட்டியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சூறாவளி காற்றும் வீசுகிறது. இதனால் ராட்சத மரங்கள் சாய்ந்து வருகின்றன.
சில பகுதிகளில் மின் கம்பிகளும் சாய்ந்து விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளன. நேற்று தொடர்ந்து விடாமல் பெய்த மழையால் மஞ்சூர், கோத்தகிரி, குன்னூர் சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தலைகுந்தா பகுதியில் ஒரு வீட்டின் மீது பெரிய மரம் சரிந்து விழுந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications