பீகாரில் மாவோ தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்:7 போலீஸார் உள்பட 11 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ரோத்தாஸ் (பீகார்):

பீகாரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் காவல் நிலையங்களில் நடத்திய இரு வேறு தாக்குதல்களில் 7 போலீஸார் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள ராஜ்பூர் காவல் நிலையம் மற்றும் பகேலா புறக்காவல் நிலையத்தை இன்று அதிகாலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இன்று அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இரு காவல் நிலையங்களையும் சுற்றி வளைத்த அவர்கள் துப்பாக்கிகளை விட்டு விட்டு ஓடிவிடுமாறு அங்கிருந்த காவலர்களை எச்சரித்தனர். ஆனால் போலீஸார் அதற்குப் பணிய மறுத்து, தீவிரவாதிகளை துப்பாக்கிளால் சுட்டனர். பதிலுக்கு தீவிரவாதிகளும் சுட்டனர்.

சுமார் 2 மணி நேரம் இந்த துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் 7 போலீஸார், ஒரு பாதுகாவலர், 3 கிராமத்திர் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 6 பேர் போலீஸார்.

இந்த சண்டையில் கிட்டத்தட்ட 500 ரவுண்டுகள் வரை இரு தரப்பினராலும் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

தீவிரவாதிகள் தப்பி ஓடுகையில் காவல் நிலையத்தில் இருந்த 18 துப்பாக்கிகளையும், பல சுற்று துப்பாக்கி தோட்டாக்களையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர். மேலும் இரு காவல் நிலையங்களிலும் குண்டுகளை வீசி நாசப்படுத்தி விட்டும் சென்றனர்.

சமீப காலத்தில் பீகாரில் நடந்த நக்சலைட் தீவிரவாதிகளின் பயங்கரத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+