மட்டக்களப்பு: புலிகளிடமிருந்து தொப்பிகலா மீட்புஇலங்கை ராணுவம் அறிவிப்பு
கொழும்பு:இலங்கையின் கிழக்கில் விடுதலைப் புலிகள் வசம் உள்ள முக்கியப் பகுதியான தொப்பிகலாவை மீட்டு விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அப்பகுதிக்குள் ராணுவம் வெகு தூரத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிதான் தொப்பிகலா. அடர்ந்த வனப் பகுதியான தொப்பிகலாவை விடுதலைப்புலிகள் தங்கம் வசம் வைத்திருந்தனர்.
இந்தப் பகுதியில் மட்டுமே புலிகள் ஆதிக்கம் இருந்ததால் இதை மீட்க கடந்த சில வாரங்களாக இலங்கை ராணுவம் கடுமையாக முயன்று வந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது.
இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு தொப்பிகலா பகுதியை ராணுவம் கைப்பற்றியதாக இலங்கை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தொப்பிகலா பகுதிக்குள் ராணுவம் ஊடுறுவிச் சென்று கொண்டிருப்பதாகவும் பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொப்பிகலா அருகே உள்ள நரகமுலா, தரவிக்குலமா ஆகிய பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் இலங்கை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தரவிக்குலமா பகுதியில்தான் விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய தலைமையிடம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் முக்கியப் பகுதியான தொப்பிகலாவை ராணுவம் கைப்பற்றியுள்ளது, அரசியல், சமூக, ராணுவ ரீதியாக இலங்கை அரசுக்கு பெரும் பலத்தைக் கொடுத்துள்ளதாக பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.
தொப்பிகலா பகுதியில்தான் திரிகோணமலை துறைமுகம் அமைந்துள்ளது. சர்வதேச நிறுவனங்களான பிரிமா, டோக்யோ சிமென்ட் ஆகிய நிறுவனங்களும் உள்ளன. மிகச் சிறந்த சுற்றுலா தலமும் கூட. எனவே தொப்பிகலாவைப் பிடித்துள்ளதால் இலங்கை அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொப்பிகலாவைப் பிடித்து விட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications