கோவை, நெல்லை, குற்றாலத்தில் நக்சல் வேட்டை
கோவை:
தேனி மாவட்ட மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் சிக்கியதைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான கோவை மற்றும் குற்றாலத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியுள்ளனரா என்று தீவிர வேட்டையில் அதிரடிப் படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வனப் பகுதியில் பதுங்கியிருந்த 3 நக்சலைட்டுகளை சமீபத்தில் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து பல்வேறு ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாகி விட்ட 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பொறியியல், சட்டக் கல்லூரி மாணவர்களை தங்களது நக்சலைட் இயக்கத்தில் சேர்த்து பெரும் நாசவேலைக்கு அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்த நக்சலைட் இயக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
தப்பி ஓடிய நக்சலைட்டுகள் மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக கோவை வனப் பகுதிக்கும், குற்றாலம் மலைப் பகுதிக்குள்ளும் ஊடுறுவியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து கோவை மற்றும் குற்றாலம் வனப் பகுதிகளில் தீவிர வேட்டை தொடங்கியுள்ளது. இந்த இடங்கள் தவிர மேற்குத் தொடர்ச்சி மலை எந்த மாவட்டங்களில் எல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையில், பெரியநாயக்கன்பாளையம் மலைப் பகுதி மற்றும் வனப் பகுதிகளில் 50 போலீஸார் இரண்டு பிரிவாக பிரிந்து சென்று சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 5 மணி முதல் பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் தீவிர தேடுதல் வேட்டையில் இவர்கள் இறங்கியுள்ளனர்.
பாலமலை, குருடிமலை, பசுமணி, மாங்குழி, பசுமணிபுதூர், ஆனைக்கட்டி மலை, மேல்முடி ரங்கசாமி கோவில் உள்ளிட்ட இடங்களில் தீவிர வேட்டை நடந்து வருகிறது.
நெல்லித்துறை, காந்தவயல், தேக்கம்பட்டி, மாந்துரைக்காடு ஆகிய பகுதிகளில் மாறுவேடத்திலும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
குறிப்பாக குற்றாலம் மலைப் பகுதியில் தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இங்கு முன்பு அல் உம்மா இயக்கத்தினரின் நடமாட்டம் இருந்தது. இந்த நிலையில் தற்போது தப்பி தலைமறைவாகியுள்ள நக்சலைட்டுகள் குற்றாலம் மலைப் பகுதிக்குள் ஊடுறுவியுள்ளனரா என்பதை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குற்றாலம் தவிர சிவகிரி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியரை ஆகிய வனப் பகுதிகளிலும் தீவிர வேட்டை நடத்தப்பட்டுள்ளது. குற்றாலம் சீசனையொட்டி அங்கு குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகளையும் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அருவிகளில் மாறு வேடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு அங்கு குளிக்க வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications