மும்பை கோத்ரெஜ் தொழிற்சாலையில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
மும்பை:மும்பையில் உள்ள கோத்ரேஜ் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
மும்பையின் கிழக்குப் பகுதியில் விக்ரோலியில் உள்ள கிளையில் இந்த விபத்து ஏற்பட்டது. காலை 8 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ வேகமாக பரவியதில் அலுவலக ஃபைல்கள், ஏ.சி மற்றும் கம்ப்யூட்டர்கள் எரிந்து சாம்பலாகின.
8 தீயணைப்பு வண்டிகள் விரைநது வந்து தீயை அணைத்தன. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இச் சம்பவத்தில் உயிர்ச் சேதம் ஏதுமில்லை. சேதத்தின் மதிப்பு குறித்து உடனடியாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications