கொழும்பு விமான நிலையத்தில் மீண்டும் நைட் சர்வீஸ்
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு விமான நிலைய இரவு நேர சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இனி 24 மணி நேரமும் கொழும்பு விமான நிலையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் கடந்த மே மாதம் வான் பலத்தைப் பெற்று இலங்கை அரசுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். கட்டுநாயகே விமானப்படைத் தளம், பலாலி விமான தளம் ஆகியவற்றில் அடுத்தடுத்து 3 முறை விமானம் மூலம் தாக்குதல் நடத்தி இலங்கையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கினர்.
இதைத் தொடர்ந்து கடந்த மே 10ம் தேதி கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை நிறுத்தப்பட்டது. பகலில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இரவு பத்தரை மணி முதல் அதிகாலை நாலரை மணி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் இரவு நேர சேவையை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. நேற்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து 24 மணி நேரமும் இனி கொழும்பு விமான நிலையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications