ஒன்இண்டியாவின் ஒன்புக்மார்க்ஸ்.காம்

Subscribe to Oneindia Tamil

ஒன்புக்மார்க்ஸ்.காம் என்ற பன் மொழி புக் மார்க்கிங் இணைய தளத்தை ஒன்இண்டியா.இன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் உங்களுக்கு விருப்பமான இணையத் தளங்களை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நீங்கள் எளிதாக இண்டர்நெட்டிலேயே பட்டிலிட்டு வைக்க முடியும் இயலும்.

கிரேனியம் இன்பர்மேசன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சார்பிலான ஒன்இண்டியா.இன், பல மொழி இணையத் தளங்களை நடத்தி வருகிறது. இப்போது ஒன்புக்மார்க்ஸ்.காம் இணையத்தை தொடங்கியுள்ளது.

இதன் மூலம் வாசகர்கள் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் தங்களுக்கு விருப்பமான இணையத் தளங்களை புக் மார்க் செய்யலாம்.

இது குறித்து கிரேனியம் இன்பர்மேசன் டெக்னாலஜிஸ் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் ஹெப்பார் கூறுகையில், இரண்டாம் நிலை நகர்களைச் சேர்ந்த மற்றும் இந்திய மொழி இண்டர்நெட் உபயோகிப்பாளர்களுக்கு உள்ளூர் தகவல்களை ஒருங்கிணைத்துத் தர இந்த ஒன்புக்மார்க்ஸ் இணையத் தளம்உதவும்.

இந்தியாவில் 41 சதவீத நகர்ப்புற இண்டர்நெட் வாசகர்கள் (சுமார் 3 கோடி பேர்) தங்களது தாய்மொழியில் தான் தகவல்களை அறிய விரும்புகின்றனர், தாய்மொழியிலான தளங்களை நாடுகின்றனர் என சர்வதேச ஆய்வு நிறுவனமான ஜஸ்க்ஸ்ட்கன்சல்ட் தெரிவிக்கிறது.

வரும் 2010ம் ஆண்டுக்குள் 1 லட்சம் கிராமங்களை பிராண்ட்பேண்ட் மூலம் இணைக்க மத்திய தகவல் தொடர்புத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் டாட்.இன் டொமைன்களை பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 2 லட்சம் டாட்.இன் டொமைன்கள் பதிவாகிவிட்டன.

இதனால் இந்திய மொழிகளிலான இணையங்களின் எண்ணிக்கையும் இந்திய மொழி தகவல் களமும் பல மடங்கு விரிவடையப் போவதைத் தான் இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன என்றார்.

மேலும் இந்திய மொழிகளிலான தேடலையும் சர்ச் என்ஜின்கள் தர ஆரம்பித்துவிட்டன. இதனால் வாசகர்கள் தாங்கள் சிரமப்பட்டு தேடிய தங்கள் மொழித் தளங்களை ஓரிடத்தில் பட்டியலிட்டு வைத்துக் கொள்ள ஒரு இடம் இருப்பது அவசியமாகிறது.

அந்த ஸ்டோரேஜ் இடத்தைத் தான் ஒன்புக்மார்க்ஸ்.காம் வழங்கவுள்ளது. தங்களுக்குப் பிடித்தமான இணையத் தளங்கள், கட்டுரைகள், பிளாகுகள், வலைப் பதிவுகளை இந்த இடத்தில் வாசகர்கள் பட்டியலிட்டு வைத்துக் கொள்ளலாம். அத்தோடு அந்தத் தளம் அல்லது யு.ஆர்.எல். தொடர்பான விவரங்களை ஆங்கிலத்திலோ அல்லது தாங்கள் விரும்பும் மொழியிலோ (யூனிகோட் எழுத்துருவில்) பதிவு செய்து கொள்ளலாம்.

தாங்கள் பட்டியலிட்ட பக்கங்களை பிற இணைய வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் ஆங்கிலம் அல்லது யூனிகோட் எழுத்துரு உதவியோடு உங்கள் பக்கங்களை வந்தடையவும் முடியும்.

இதற்காக வாசகர்கள் ஒன்இண்டியா.இன் தளத்தில் அக்கெளண்ட்டை துவங்கினால் மட்டும் போதும்.

ஒன்இண்டியா தமிழ் உள்ளிட்ட 4 இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் உடனுக்குடன் செய்திகளை வெளியிடும் தளம். 2000ம் ஆண்டு முதல் இந்த சேவையை வழங்கி வருகிறது. செய்திகள் மட்டுமின்றி மேலும் பல இணைய சேவைகளையும் வழங்கி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+