மஹாராஷ்டிரா- மழைக்கு 40 பேர் பலி:மும்பையில் இயல்பு நிலை திரும்புகிறது
நாக்பூர்:
மஹாராஷ்டிராவில் பெய்து வரும் கன மழையால் அங்கு 344 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுவரை 40 பேர் பலியாகியுள்ளனர்.
மஹாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பெரும் கன மழை பெய்து வருகிறது. இதனால் மும்பை நகரம் வெள்ளத்தில் மிதந்தது. தாழ்வான பகுதிகளில் இன்னும் மழை நீர் தேங்கியுள்ளது.
மழையும் விட்டு விட்டு பெய்தவண்ணம் உள்ளது. ஆனாலும் மும்பையில் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
மழைக்கு இதுவரை 40 பேர் பலியாகியுள்ளனர்.
அமராவதி மாவட்டத்தில் 344 கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருக்கின்றன. 4,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 12,000 வீடுகள் வெள்ளத்தால் பலத்த சேதமடைந்துள்ளன.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கோல்காபூரிலும் வெள்ளம் பாதித்திலுள்ள சில கிராமங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
மும்பையில் மெதுவாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. சாலைகளில் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. ரயில்களும் ஓடத் தொடங்கியுள்ளன. இருப்பினும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications