சென்னை: அரசு பஸ்கள் முந்த முயன்றதில்2 பள்ளி மாணவர்கள் நசுங்கிச் சாவு
சென்னை:சென்னையில் இரண்டு அரசுப் பேருந்துகள் ஒன்றையொன்று முந்த முயன்று அசுரத்தனமாக சென்றதில், படிக்கட்டில் நின்று பயணம் செய்த 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை நகரில் சமீபகாலமாக சாதாரண வகைப் பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. மாறாக அதிக கட்டணத்துடன் கூடிய ப்ளூ லைன், எல்லோ லைன் பேருந்துகள் அதிக அளவில் ஓடத் தொடங்கியுள்ளன.
இந்த வகை பேருந்துகளில் பள்ளி மணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் கிடைக்கிற பேருந்துகளில் தொற்றிக் கொண்டு பள்ளிகளுக்கு ஓட வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் உள்ளனர்.
அலுவலக நேரமான காலை மற்றும் மாலை நேரங்களில் சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், கடும் கூட்டத்துக்கு மத்தியில் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு பள்ளிகளுக்குச் சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை இதுபோல படிக்கட்டில் தொற்றிக் கொண்டு பயணித்த இரு பள்ளி மாணவர்களின் விதியை, பொறுப்பற்ற வேகத்தில் சென்ற இரு அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மிகவும் பரிதாபமான முறையில் முடித்து வைத்து அந்த இரு மாணவர்களின் வாழ்க்கையிலும் விளையாடியுள்ளனர்.
இன்று காலை வடபழனியிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு ஒரு டவுன் பஸ் கிளம்பியது. அதேபோல கோயம்பேட்டிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு இன்னொரு பஸ் வந்தது.
இரு பேருந்துகளும் உதயம் தியேட்டர் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தன. அப்போது, யார் முந்திச் செல்வது என்பதில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கும் போட்டி ஏற்பட்டது. படு வேகமாக இருவரும் உதயம் தியேட்டர் சந்திப்பில் வளைந்தனர்.
அவர்களின் ராட்சத வேகத்தைப் பார்த்து அந்தப் பகுதியே பயந்து போனது. இரு பேருந்துகளும் படுவேகமாக வளைந்தபோது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த இரு மாணவர்கள் பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர்.
இதில் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து போனான். இன்னொரு மாணவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தான்.
இரு ஓட்டுநர்களின் பொறுப்பற்ற டிரைவிங்கால், இரு அப்பாவி பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது அப்பகுதி மக்களுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு விரைந்து நடவடிககை எடுத்து காலை மற்றும் மாலை நேரங்களில் சாதாரணப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஓட்டுநர்கள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று கண்டிப்பாக அறிவுறுத்த வேண்டும். ப்ளூ லைன் மற்றும் எல்லோ லைன் பேருந்துகளிலும் இலவச பஸ் பாஸ்களுடன் வரும் மாணவர்ளை அனுமதிக்க வேண்டும் என்று அப்பாவி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications