பிளஸ் ஒன் டாக்டர் திலீபன் சரண்டர்:சிடியை நொறுக்கிய தந்தை!!
திருச்சி:மணப்பாறையில் பெண்ணுக்கு சிசேரியன் செய்த டாக்டர் தம்பதியின் மகனான பிளஸ் ஒன் டாக்டர் திலீபன் இன்று திருச்சி சிறுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மணப்பாறையில் க்ளினிக் வைத்து நடத்தி வந்த டாக்டர் தம்பதிகள் முருகேசன்-காந்திமதியின் மகன் திலீபன் ராஜ். கின்னஸ் சாதனைக்காக தன் மகனை வைத்து டாக்டர் முருகேசன் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்தார்.
இதை வீடியோவாக சி.டி.யில் பதிவு செய்து, அதை மணப்பாறையில் நடந்த டாக்டர்கள் கருத்தரங்கில் போட்டுக் காட்டி சிக்கலில் மாட்டினார்.
![]() |
பிளஸ் ஒன் மாணவன் அறுவை சிகிச்சை செய்த இந்த விவகாரத்தில் டாக்டர் தம்பதி கைது செய்யப்பட்டனர். ஆனால், சிகிச்சையை செய்த இவர்களது மகன் திலீபன் தலைமறைவாகிவிட்டார். இவரை போலீசார் தேடி வந்தனர்.
அதே நேரத்தில், சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் முருகேசனையும் காந்திமதியையும் போலீசார் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர்.
மணப்பாறை காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை கூடுதல் எஸ்.பி. சாந்தி தலைமையில் நள்ளிரவு வரை போலீஸார் விசாரணை செய்தனர். மீண்டும் காலையும் விசாரணை தொடர்ந்தது.
இந்த விசாரணையின்போது முருகேசன் தன்னிடம் சி.டி. எதுவும் கிடையாது என்றார். அப்போது போலீஸார் ஐ.எம்.ஏ. மருத்துவக் கழகத்தை சேர்ந்தவர்கள் சி.டி.யை பார்த்தது குறித்து கேட்டபோது, சர்ச்சைக்குரிய அந்த சி.டி.யை நான் உடைத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் மருத்துவமனையிலும் வைத்தும் சுமார் 2 மணி நேரம் இவர்களிடம் விசாரணை நடத்திய பின் டாக்டர் தம்பதியை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திலீபன் சரண்:
இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த திலீபன் முன் ஜாமீன் கேட்டு மனு செய்தார். ஆனால், அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்துவிட்டது.
![]() |
இதையடுத்து திலீபன் இன்று திருச்சி சிறுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இதற்கிடையில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி டாக்டர் தம்பதி தாக்கல் செய்த மனுவை திருச்சி அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்கக்கனி தள்ளுபடி செய்துவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!














Click it and Unblock the Notifications