சென்னை, மதுரை ரயில் நிலையங்களைதகர்க்க நக்சலைட்டுகள் திட்டம்?!
பெரியகுளம்:தேனி மாவட்ட மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருந்த இடத்தில் போலீஸார் நடத்திய சோதனையில், சென்னை, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் ரயில் நிலையங்களைத் தகர்க்க தீட்டப்பட்ட சதித் திட்டம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை கரட்டுப் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு மூன்று நக்சலைட்டுகள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து பெருமளவு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நக்சலைட்டுகள் மூன்று பேரும் பெரும் நக்சலைட் கும்பலுடன் இணைந்தவர்கள் என்பதும் மாணவர்களை ஒன்று திரட்டி பெரும் தாக்குதல் திட்டத்தை வகுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து இந்த மலைப் பகுதியில் தீவிர சோதனை நடந்து வருகிறது. வீரப்பன் வேட்டையில் முன்பு ஈடுபடுத்தப்பட்ட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் தேடுதல் மற்றும் தீவிர சோதனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
சோத்துப்பாறை, அகமலை, சின்னூர், பெரியூர், கும்பக்கரை அருவி மலைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இதில் சென்னை, மதுரை, ராமேஸ்வரம், நெல்லை ஆகிய ஊர்களில் உள்ள ரயில் நிலையங்களின் வரைபடங்கள் கிடைத்தன. அங்குள்ள முட்புதர்களில் இந்த வரைபடங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த ரயில் நிலையங்களை குண்டு வைத்துத் தகர்க்க நக்சலைட்டுகள் திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அப்பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்தும் போலீஸார் வேட்டை நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications