200 டாலரில் சிங்கப்பூரிலிருந்து சென்னை வரலாம்
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் குறைந்த கட்டண விமான நிறுவனமான டைகர் ஏர்வேஸ் நிறுவனம், அக்டோபர் 28ம் தேதி முதல் இந்தியாவுக்கு சேவையை தொங்கவுள்ளது.
டைகர் ஏர்வேஸ் நிறுவனம் மிகவும் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை நடத்தும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் தற்போது இந்தியாவுக்கும் தனது சேவையை விரிவுபடுத்துகிறது.
அக்டோபர் 28ம் தேதி முதல் இந்தியாவுக்கான தனது சேவையை டைகர் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்குகிறது. அதன்படி, வரிகள் உள்பட 200 சிங்கப்பூர் டாலர் மட்டும் கட்டணமாக செலுத்தி இந்தியாவுக்கு பயணிக்க முடியும்.
சிங்கப்பூருக்கு அதிக அளவிலான இந்தியப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில் ஏற்கனவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க் ஏர் ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
அதேபோல சிங்கப்பூர் பயணிகளை இந்தியாவுக்கு இழுக்கும் முயற்சியில் ஏர் இந்தியா, இந்தியன், ஜெட் ஏர்வேஸ், ஏர் சஹாரா ஆகிய நிறுவனங்கள் முயன்று கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது டைகர் ஏர்வேஸ் நிறுவனம் சேருகிறது.
சென்னை, கொல்கத்தா, கோவா, கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட 6 நகரங்களுக்கு டைகர் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவையை மேற்கொள்ளும்.
அக்டோபர் 28ம் தேதி சென்னைக்கு தனது முதல் பயணத்தை டைகர் ஏர்வேஸ் விமானம் மேற்கொள்கிறது. அக்டோபர் 30ம் தேதி கொச்சிக்கான சேவை தொடங்கப்படுகிறது.
சென்னைக்கு வாரம் நான்கு முறையும், கொச்சிக்கு வாரம் மூன்று முறையும் விமான சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கும் படிப்படியாக விமான சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.
தென் கிழக்கு ஆசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 20 நகரங்களுக்கு டைகர் ஏர்வேஸ் தனது விமான சேவையை மேற்கொண்டு வருகிறது.
சிங்கப்பூர்வாசிகளுக்கு இந்தியா மிகவும் பிடித்தமான நாடாக உருவாகி வருவதால் சிங்கப்பூரைச் சேர்ந்த பல விமான சேவை நிறுவனங்கள் இந்தியாவுக்கு விமான சேவையை மேற்கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications