எங்கள் ஆதரவு உங்களுக்கு தேவை:திமுகவுக்கு ராமதாஸ் பதிலடி
சென்னை:எங்கள் செயல்பாடுகள் திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இருக்காது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்தும், சென்னை மகளிர் பேரணி குறித்தும் பாமக நிறுவனர் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் தர ராமதாசுக்கும் அவருக்கும் இடையே கடந்த 4 நாட்களாக அறிக்கைப் போர் நடந்து வந்தது.
இந் நிலையில் ராமதாசின் அறிக்கைய தனக்கு மனவேதனையை அளிப்பதாக முதல்வர் கருணாநிதி அறிக்கையை வெளியிட்டார். மேலும் ராமதாசின் செயல்களால் கூட்டணி உடையும் என்றும் எச்சரித்திருந்தார்.
இந் நிலையில் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
திமுக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருகிறோம், இது 5 வருடம் தொடர்வதில் எந்த மாற்றமும் இல்லை.
தமிழக அரசுக்கு நாங்கள் எந்தவிதமான நெருக்கடியும் கொடுக்க மாட்டோம். எங்களுடைய செயல்பாடுகளும் அவ்வாறு அமையாது.
எங்கள் பிரச்சனைகள் குறித்து கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தால் சொல்லலாம். ஆனால் அவ்வாறான கூட்டங்கள் நடத்தப்படததால் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க முடியவில்லை.
கூட்டுறவு தேர்தலை குறித்து எந்த ஆலோசனை நடத்தப்படவில்லை. இவ்வாறு இருந்தால் எப்படி தேர்தலை சந்திப்பது.
தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து எளிய மக்களுக்கும் தெரியும், இது குறித்து நேரடியாக விசாரித்தலே தெரிய வரும். ஒருவர் மட்டும் பேசுவதால் இந்த பிரச்சனையை வெளியே கொண்டு வர முடியாது.
திமுகவுடன் நட்பு முறையில் கூட்டணி அமைத்துள்ளதால் அரசை புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என அவசியமில்லை. விமான நிலைய விரிவாக்கம், துணை நகரம், பாலாறு போன்றவை மக்கள் பிரச்சனைகளில் என்பதால் எங்கள் கருத்துகளை கூறினோம்.
திமுக அரசு மெஜாரிட்டி இல்லை. எங்கள் ஆதரவு அவர்களுக்கு தேவை என்பதால் தொடர்ந்து நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications