அமிதாப் வீட்டில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
மும்பை:பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் அது வெறும் புரளி என பின்னர் தெரிய வந்தது.
மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள அமிதாப் பச்சனின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து மோப்பா நாய்கள் சகிதம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நிபுணர்களுடன் போலீஸ் படை அமிதாப் வீட்டுக்கு விரைந்தது.
வீட்டின் அனைத்துப் பகுதியிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் குண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே இது வெறும் புரளி என தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications