உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஸ்லிம்;பில் கேட்ஸை முந்தி சாதனை

Subscribe to Oneindia Tamil

மெக்சிகோ:பல வருடமாக நம்பர் ஒன் பணக்காரராக இருந்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி விட்டு அந்த இடத்திற்கு வந்துள்ளார் மெக்சிகோவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவன அதிபரான கார்லோஸ் ஸ்லிம்.

Carlos Slim

உலகின் மிகப் பெரும் பணக்காரராக பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்தவர் கேட்ஸ். இந்த நிலையில் அவரது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் மெக்சிகோவைச் சேர்ந்த தொழிலதிபரான கார்லோஸ் ஸ்லிம்.

கார்லோஸ் ஸ்லிம், அமெரிக்கா மொவில் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம்தான் லத்தீன் அமெரிக்காவிலேயே மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும்.

இதுதவிர ஏராளமான ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், நிதி நிறுவனங்களையும் ஸ்லிம் நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஸ்லிம் 2வது இடத்திற்கு முன்னேறியிருந்தார். அதுவரை 2வது இடத்தில் இருந்த அமெரிக்காவின் வாரன் பஃபெட் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

ஆனால் தற்போது கேட்ஸ் 2வது இடத்திற்கு இறங்கி வந்து விட்டார். ஸ்லிம், படு வேகமாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்கா மொவில் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு படு வேகமாக உயர்ந்ததால்தான் கேட்ஸ் இடத்தை ஸ்லிம் பிடிக்க முடிந்துள்ளது.

ஸ்லிம்மின் இந்த அசுர வளர்ச்சியால் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த வந்த கேட்ஸ் முதல் முறையாக 2வது இடத்திற்கு இறங்கி வந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+