கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு:தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

மைசூர்:தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்துமாறு கர்நாடக மாநில துணை முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகத்தின் காவிரிப் பாசனப் பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தொடர்ந்து மழை பெய்வதாலும், அணைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து கர்நாடக அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டனர். இதனால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இந்த நிலையில், கிருஷ்ணராஜசாகரிலிருந்து தண்ணீர் திறந்து விட்டதற்கு மாண்டியா மாவட்ட விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. மைசூருக்கு வந்த துணை முதல்வர் எடியூரப்பாவை கர்நாடக விவசாயிகள் சூழ்ந்து கொண்டு கெரோ செய்தனர்.

இதையடுத்து கிருஷ்ணராஜசாகரிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது உண்மைதான். ஆனால் ஏன் திறந்து விடப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. இதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

அணை முழுமையாக நிரம்பும் வரை தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் எடியூரப்பா.

இதற்கிடையே, மாண்டியா மாவட்டம் கெஜ்ஜலகரே கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், பெங்களூர்-மைசூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடக் கூடாது. அணை நிரம்புவற்குள் தண்ணீர் திறந்து விட்டதன் மூலம் விவசாயிகளுக்கு அரசு துரோகம் இழைத்து விட்டது. தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.

கர்நாடக விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து கிருஷ்ணராஜசாகரிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளதால், தற்போது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் வரத்து நின்று போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக விவசாயிகளின் போக்கு தமிழக காவிரிப் பாசன விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+