மருத்துவமனைகளில் ஆஸி. போலீஸ் ரெய்டுமேலும் 4 இந்திய டாக்டர்களிடம் விசாரணை
கான்பெரா:
லண்டன் மற்றும் கிளாஸ்கோ நகரங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல் மற்றும் சதித் திட்டம் தொடர்பாக இந்திய டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இரு மருத்துவமனைகளில் இன்று போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
லண்டன் கார் குண்டுகள் மற்றும் கிளாஸ்கோ தாக்குதல் தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் முகம்மது ஹனீப், டாக்டர் சபீல் அகமது, அவரது அண்ணன் டாக்டர் கபீல் அகமது உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
ஹனீப் ஆஸ்திரேலிய போலீஸ் வசம் உள்ளார். அவரை வருகிற திங்கள்கிழமை மாலைவரை தங்களது வசம் வைத்து விசாரணை நடத்த போலீஸார் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் மேலும் நான்கு இந்திய டாக்டர்களிடம் ஆஸ்திரேலிய போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை ஆணையர் மைக் கீட்லி கூறுகையில், நான்கு இந்திய டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
நியூ செளத்வேல்ஸ் மாநிலத்தில் ஒரு டாக்டர்டிம் விசாரணை நடத்தியுள்ளோம். தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறோம்.
தீவிரவாதிகளுடன் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது, எங்கெல்லாம் இவர்களின் செயல்கள் உள்ளன, தவறு செய்தது யார் என்பதை அறியவே தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளோம் என்றார்.
இந்த நிலையில், பெர்த் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும், கல்கூர்லி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் ஆஸ்திரேலியே போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஹனீப் மீது இதுவரை எந்த குற்ரச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. ஒருவேளை அவர் மீது குற்றச்சாட்டு எதையும் பதிவு செய்தாலும், விசாரணைக்காக அவர் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார், அவரை ஆஸ்திரேலியாவிலேயே தொடர்ந்து வைத்திருக்கும் உத்தேசத்தில் ஆஸ்திரேலிய போலீஸார் இல்லை என்று கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications