ராமேஸ்வரத்தில் இன்று உமாபாரதி போராட்டம்
மதுரை:சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து பாரதீய ஜனசக்தி தலைவர் உமாபாரதி தலைமையில் இன்று ராமேஸ்வரத்தில் போராட்டம் நடைபெறவுள்ளது.
ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது, சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரி வரும் உமாபாரதி, இன்று ராமேஸ்வரத்தில் சத்யாகிரகப் போராட்டத்தை நடத்தவுள்ளார்.
இதற்காக ராமேஸ்வரம் செல்லும் வழியில் நேற்று மதுரைக்கு வந்த உமாபாரதி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில், மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது. இதனால் இந்துக்களின் மனம் புண்படும்.
சேது சமுத்திரத் திட்ட பணிகளால் ஏராளமான மீனவர்கள் வேலையிழந்து ஆதரவற்று நிற்கின்றனர்.
ராமர் பாலம் இந்துக்களின் வரலாற்று சின்னமாக திகழ்கிறது. இந்தப் பாலம் அழிவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பழமையான வரலாற்று சின்னத்தை அழித்து விட்டு, இந்த அரசு ஒரு திட்டத்தை நிறைவேற்றுகிறது என்றால் அதை கண்டிப்பாக தடுத்து நிறுத்துவோம்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இது சம்பந்தமாக புவியியல் ஆய்வு மையத்திற்கு சென்று ராமர் பாலம் பற்றிய தகவல்களை சேகரித்தார். அவர் சேகரித்த தகவல்களை அறிக்கையாக தயாரித்து, அனைத்து மக்களும் காணும் வகையில் தரச் சொல்லுங்கள் பார்ப்போம் என்றார் உமாபாரதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications