உசிலம்பட்டி: திமுக-கம்யூ தொண்டர்கள் மோதல்தேர்தல் அலுவலகத்துக்கு தீ வைக்க முயற்சி
உசிலம்பட்டி:உசிலம்பட்டியில் கூட்டுறவு சங்கத் தேர்தல் அலுவலகத்துக்கு தீ வைக்க முயற்சி நடந்தது.
உசிலம்பட்டியை அடுத்த நத்தபடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு தொடக்க வங்கிக்கு இன்று மூன்றாவது கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது. மனு தாக்கல் செய்ய திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வந்தனர்.
தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணன் திமுகவினரிடம் மட்டும் மனுக்களை பெற்றார். இதனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆத்திரமடைந்து, தேர்தல் அலுவலகத்தை தீ வைத்து கொளுத்த முயற்சித்தனர். அங்கு நின்றிருந்த போலீஸார் இதை தடுத்து நிறுத்தினர்.
திமுகவுக்கு எதிராகவும், தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனுக்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷமிட்டனர். பதிலுக்கு திமுகவினரும் கோஷமிட்டதால் இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபடும் சூழல் உருவானது.
இதே போல் உசிலம்பட்டிக்கு அருகே உள்ள உத்தப்ப நாயக்கனூரிலும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலை 11 மணி வரை தேர்தல் அதிகாரி மகாதேவன் அங்கு வராததால், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications