மாற்றிய அதிகாரிகளை மீண்டும் நியமிப்பதா?மதுரையில் ஆர்ப்பாட்டம்-ஜெ. அறிவிப்பு
சென்னை:மதுரை மேற்கு சட்டசபை இடைத் தேர்தலின்போது மதுரையிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் அதே பணியிடத்தில் நியமிப்பதை கண்டித்து மதுரையில் வருகிற 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் நடந்தபோது திமுக அரசின் அராஜகம் அத்துமீறியது. இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனது.
சட்டம் ஒழுங்கை காக்கத் தவறிய காரணத்திற்காகவும், திமுக அரசுக்கு சாதகமாக செயல்பட்டதற்காகவும், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நியாயமான நடவடிக்கையை அனைவரும் வரவேற்றனர். தேர்தல் நடந்து சில நாட்களே ஆன நிலையில், தற்போது மாற்றப்பட்ட அனைத்து அதிகாரிகளும் மீண்டும் அதே இடத்தில் பணியாற்றிட திமுக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த செயல் ஜனநாயக விரோத செயலாகும். இதன் மூலம் திமுக அரசின் ஒரு தலைபட்சமான நடவடிக்கைகள் அனைத்திற்கும் மேற்படி அதிகாரிகள் துணை போவதோடு, மதுரையில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சரின் மகன் மு.க.அழகிரியின் அதிகார துஷ்பிரயோகம் மேலும் அதிகரித்து விடும்.
எனவே மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலின்போது மாறுதல் செய்யப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே இடத்தில் பணிபுரிய ஆணையிட்டுள்ள திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அதிமுக மாநகர மாவட்ட கழகம் சார்பில் வருகிற 16ம் தேதி காலை 10 மணிக்கு மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாநகர மாவட்ட கழக செயலாளர் ராஜன் செல்லப்பா, வேட்பாளர் செல்லூர் ராஜு ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications