தூங்கும் தமிழக உளவுதுறை-சுதர்சன நாச்சியப்பன்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் காரில் ரிமோட் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டதன் மூலம் தமிழக உளவுத்துறை செயல் இழந்துவிட்டது உறுதியாகிறது என காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.

சிவகங்கைகையச் சேர்ந்த நாச்சியப்பன், குண்டு வெடித்த இடத்தை பார்வையிட்டார். பின்பு கொல்லப்பட்ட முருகனின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சென்று பார்த்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால்தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் மருத்துவ செலவை தமிழக அரசு ஏற்று முழு நிதி உதவி செய்ய வேண்டும்.

சாதாரண மக்களின் குறை தீர்ப்பு மற்றும் தனி மனித உரிமை மீறல் என்ற அடிப்படையில் இந்த பிரச்சனையை அணுக உள்ளோம். இறந்த முருகனின் குடும்பத்திற்கு இதுவரை போலீஸ் பாதுகாப்பு தரப்படவில்லை.

கொல்லப்பட்ட முருகனின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து பண உதவி செய்யுமாறு முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன்.

மேலும் இந்த கொலை சம்பந்தமான முழு விபரத்தையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. ஆனால் அதுவரை உள்ளூர் போலீஸாரும், உளவுத் துறையும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு செயல்படாமல் இருந்துள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+