ஜெயலலிதாவுடன் ஜஸ்வந்த் சிங் சந்திப்பு
சென்னை:பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் இன்று சென்னை வந்தார். குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
அதிமுக இடம் பெற்றுள்ள ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி, குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.
ஆனால் தங்களது ஆதரவுடன் போட்டியிடும் பைரான் சிங் ஷெகாவத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி 3வது அணியைக் கோரி வருகிறது.
இந் ˆயில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் இன்று சென்னை வந்தார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இன்று சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஷெகாவத்துக்கு அதிமுக ஆதரவு தர வேண்டும் என்று அவர் கோரவுள்ளார். பாஜகவின் சார்பில் ஜஸ்வந்த் சிங் வரவில்லை என்றும், ராஜஸ்தான் மாநிலத்தைச் ேசர்ந்தவர் என்ற முறையில், ஷெகாவத் சார்பில் ஜெயலலிதாவுடன் பேச அவர் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் சென்னைக்கு வந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைச் சந்தித்து ஆதரவு கோரினார். ஆனால் ஜெயலலிதாவை அவர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications