திமுகவுடன் ஒட்டும் இல்லை,உறவும் இல்லை:சேலம் பாமக அறிவிப்பு!!!!
சேலம்:திமுகவுடன் இனி எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று சேலம் மாவட்ட பாமக அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்பு மனு தாக்கலின் போது திமுகவினருக்கும், பாமகவினருக்கும் இடையே பெரும் மோதல் எழுந்தது. இதில் பாமகவினர் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இதையடுத்து திமுக, பாமக இடையிலான மோதல் பெரிதாகி தற்போது ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று பாமகவினர் அறிவிக்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது.
பாமகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் காவேரி (எடப்பாடி), தமிழரசு (ஓமலூர்), கண்ணையன் (தாரமங்கலம்) மற்றும் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவரும், சேலம் மாவட்ட பாமக துணை பொதுச் செயலாளருமான சண்முகம் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து இதை தெரிவித்தனர்.
செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், திமுகவைச் சேர்ந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறார். எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தன்னிச்சையாக நடந்து கொள்கிறார். எங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.
கூட்டுறவு சங்கத் தேர்தல் என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் இதில் கூட கூட்டணிக் கட்சியினர் குறிப்பாக பாமகவினர் வந்து விடக் கூடாது என்று அவர் திட்டமிட்டு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது.
ஓமலூர் எம்.எல்.ஏ தமிழரசுவை கொலை செய்யும் நோக்கத்துடன் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது மகன் ராஜா ஆகியோர் ஏவி விட்ட குண்டர்கள் சோடா பாட்டில்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்க முயன்றுள்ளனர்.
இனிமேல் பாமகவுக்கும், திமுகவுக்கும் எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. குண்டர்களால் நடத்தப்படும் சேலம் மாவட்ட திமுக மக்கள் ஆதரவை இழந்து விட்டது.
அமைச்சர் சொல்வதற்கேற்பத்தான் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை ஆணையர், காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் ஆடுகின்றனர். திமுகவினரால் தாக்கப்பட்டது நாங்கள் என்றாலும் அவர்கள் மீது வழக்கு தொடராமல் எங்கள் மீதே வழக்குப் போட்டுள்ளனர் என்று அவர்கள் கூறினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications