நக்சல் சுந்தரமூர்த்தியை விடுவிக்கக் கோரி வழக்கு
சென்னை:நக்சலைட் தலைவர் சுந்தரமூர்த்தியை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிபாபு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெரியகுளம் வனப் பகுதியில் நக்சலைட்டுகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நக்சலைட் தலைவர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 3 நக்சலைட்டுகள் திருப்பூரில் கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த சுந்தரமூர்த்தி பிடிபட்டதன் மூலம் நக்சலைட்டுகளின் தென் மாவட்ட செயல்பாடுகளுக்கு பெரும் பாதிப்பை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிபாபு என்பவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில் சுந்தரமூர்த்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சட்டவிரோத போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும். அவரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று பிற்பகலுக்கு மேல் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications