கடலோர மாவட்டங்களில் நக்சல் அலை:விடுதலைப் புலி ஆதரவாளர்கள் உதவி?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நக்சலைட்டுகள் தங்களது செயல்பாடுகளை மறைமுகமாக நிகழ்த்தத் தொடங்கியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் கூறுகிறார்கள். இவர்களுக்கு விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள் சில ஆதரவு தருவதாகவும் உளவுப் பிரிவு கூறுகிறது.

கடலோர மாவட்டங்களின் பல பகுதிகளில் உள்ள கிராமங்களில் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இலக்கியவாதிகள் என்ற பெயரில் ஊடுருவியுள்ளனர். விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகளின் உதவியுடன் அக்கிராமங்களில் தங்கியிருந்து இலக்கியத்தைப் பரப்புகிறோம் என்ற போர்வையில் ஆயுதப் போராட்டங்கள் குறித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த செயல்பாடுகள் அனைத்தும் சமீப காலத்தில்தான் தொடங்கியுள்ளன. இதுகுறித்து மாநில உளவுத் துறைக்கோ அல்லது மத்திய உளவுப் பிரிவுக்கோ இதுவரை தெரியாமல் இருந்து வந்தது.

Gun recovered from Naxals

இதனால்தான் பெரியகுளம் வனப் பகுதியில் நக்சலைட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டபோது காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது. உண்மையில் தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில் ஏற்கனவே நக்சலைட்டுகள் கால் பதிக்க ஆரம்பித்து விட்டனர் என்று உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்பட்டாலும் கூட அதை நிரூபிப்பதற்கு உரிய ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று மாநில உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

The Radha Nagar house in Tiruppur, where naxals stayed

தமிழகத்திலேயே மிகவும் பின் தங்கிய மாவட்டம் தர்மபுரி என்று கூறப்படுவது உண்டு. ஆனால் அதே நிலையில்தான் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பலவும் உள்ளன. காரணம் இங்கு பெரிய அளவிலான தொழில் நிறுவனங்களோ, வேலை வாய்ப்புகளுக்கேற்ற சூழ்நிலையோ இன்னும் வரவில்லை.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம். மிகவும் வறண்ட மாவட்டம் என்று பெயர் பெற்றது ராமநாதபுரம். இங்கு ஒருவர் பட்டப்படிப்பை முடித்தால் வேலைக்கு வெளியேதான் வந்தாக வேண்டிய நிலை. பட்டதாரிகளுக்கே அந்த நிலை என்றால் பள்ளிப் படிப்பைக் கூட தாண்டாமல் இருப்பவர்களின் நிலையைக் கூற வேண்டியதில்லை.

நக்சலைட்டுகளுக்கு இதுபோன்ற வேலையில்லாமல் உள்ள இளைஞர்கள்தான் இலக்கு. அவர்களைத்தான் தேடித் தேடி தங்களது அமைப்பில் இணைத்துள்ளனர்.

இருப்பினும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் உள்ளது போல தென் மாவட்டங்களில் நக்சலைட் இயக்கங்கள் வலுப் பெற முடியாது. காரணம், தென் மாவட்ட இளைஞர்கள் மத்தியில் விரக்தி மனப்பான்மை இல்லை என்பதால் இங்கு நக்சலைட் அமைப்புகள் வேரூண்றுவது இயலாத காரியம் என்று உளவுப் பிரிவு போலீஸார் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+