காக்கைகளால் தரையிறங்க முடியாமல் தவித்தசென்னை-டெல்லி விமானம்
டெல்லி:டெல்லி விமான நிலையத்தின் மீது பறந்து கொண்டிருந்த காக்கைகளால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 2 மணி நேரம் தரையிறங்க முடியாமல் தவித்தது.
சென்னையிலிருந்து டெல்லிக்கு சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது.
அப்போது அந்தப் பகுதியில் 2 காக்கைகள் பறந்து கொண்டிருந்தன. இதனால் விமானம் தரையிறங்க முடியவில்லை.
இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் காக்கைகளை விரட்ட நடவடிக்கை எடுத்தனர். ஒரு வழியாக காக்கைகள் வேறு பக்கம் பறந்த பின்னர் 2 மணி நேரம் தாமதமாக விமானம் தரையிறங்க முடிந்தது.
திரும்பி வந்த விமானம்:
அதே போல டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பகல் 12.30 மணிக்கு மும்பை கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடு வழியில் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் டெல்லியிலேயே தரையிறக்கப்பட்டது.
38 பயணிகளோடு சென்று கொண்டிருந்த அந்ச விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் மற்றொரு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications