நிரம்பியது கிருஷ்ணராஜசாகர்-அணை திறப்பு:மேட்டூரும் விரைவில் நிரம்பும்!
மேட்டூர்:கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பி விட்டதால் பெருமளவு வரும் உபரி நீர் அப்படியே தமிழகத்தின் மேட்டூர் அணைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.
முக்கியமான, பெரிய அணையான கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும் அதிக அளவில் நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியது.
மேட்டூர் அணைக்கு இங்கிருந்துதான் தண்ணீர் திறக்கப்படுகிறது என்பதால் கிருஷ்ணராஜசாகர் நிரம்பிய செய்தி தமிழகத்திற்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
நேற்று மாலை அணை நிரம்பியதைத் தொடர்ந்து அணைக்கு வந்து கொண்டுள்ள உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர் நாளை காலையில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியைத் தொட்டுள்ள நிலையில் வருகிற 25ம் தேதி அணை திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் கிருஷ்ணராஜசாகரிலிருந்து பெருமளவு நீர் திறந்து விடப்பட்டிருப்பதால், முன்கூட்டியே அணை திறக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
மேலும் கிருஷ்ணராஜசாகரிலிருந்து தொடர்ந்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டால், மேட்டூர் அணை விரைவில் நிரம்பக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன என்று பொதுப்பணித்துறை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications