முஷாரப்பின் ரத்தத்தால் பாவம் கழுவப்படும்: அல்-கொய்தா
பாகிஸ்தான்:லால் மசூதிக்குள் ராணுவம் நுழைந்து 80 பேரை சுட்டுக் கொன்றதையடுத்து பாகிஸ்தான் அதிபர் முஷாரபுக்கு அல்-கொய்தா கடும் மிரட்டல் விடுத்துள்ளது.
இஸ்லமாபாத்தின் லால் மசூதியில் ராணுவம் நுழைந்து 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதையடுத்து பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு அல்-கொய்தா கடும் மிரட்டல் விடுத்துள்ளது.
பின்லேடனின் நெருங்கிய சகாவான அய்மான் அல்-ஜவாகிரி இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில்,
முஷாரப் தனது ராணுவத்தை வைத்து மத குருவை கொன்றுள்ளார். மேலும் பாகிஸ்தானிய மக்களின் கெளரவத்தையும், பெருமையையும் அழித்துவிட்டார். அவரை பாகிஸ்தான் மண்ணிலிருந்து பிடுங்கும் வகையில் அவருக்கு எதிராக செயல்பட வேண்டும்.
அப்பாவி முஸ்லீம்களைக் கொன்ற முஷாரப் கண்டிப்பாக சாக வேண்டும். அவரை கொன்று , அவரது ரத்தத்தால் மூலம் அவர் செய்த பாவம் கழுவப்படும் என ஜவாஹிரி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
இந்த மிரட்டலையடுத்து முஷாரப்பின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications