லண்டன் தீவிரவாத தாக்குதல்:பாட்டீலுடன் குமாரசாமி ஆலோசனை
டெல்லி:இங்கிலாந்து தீவிரவாத தாக்குதலில் பெங்களூரைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் அடிபடும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை கர்நாடக முதல்வர் குமாரசாமி டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் குமாரசாமி பேசுகையில், இங்கிலாந்து தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் பெங்களுரைச் சேர்ந்த சிலரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
இது தொடர்பான முழு விவரங்களையும் மத்திய அரசிடம் கர்நாடகம் வழங்கியுள்ளது. நான் சிவராஜ் பாட்டீலை சந்தித்தபோது கர்நாடக மாநில டிஜிபி ஸ்ரீனிவாசனும் உடன் இருந்தார்.
எந்த சவாலையும் சமாளிக்க மாநில உள்துறையும், புலனாய்வுத் துறையும் முழு அளவில் தயார் நிலையில் உள்ளன. எந்த வகையிலும் பெங்களூரின் பெயர் கெட அனுமதிக்க மாட்டோம் என்றார் குமாரசாமி.
இருப்பினும் டாக்டர் முகம்மது ஹனீப் குறித்த கேள்விகளுக்கு குமாரசாமி பதிலளிக்க மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications