700 விக்கெட் வீழ்த்தி முரளீதரன் சாதனை!
கண்டி:இலங்கை சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரன் 700 விக்கெட்டுக்களை வீழ்த்தி, புதிய சாதனை படைத்துள்ளார். ஷான் வார்னேவின் உலக சாதனையை முறியடிக்க இன்னும் 9 விக்கெட்டுக்களே முரளிக்குத் தேவை.
உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் முரளீதரனும் ஒருவர். எந்த மைதானமாக இருந்தாலும், எதிரில் விளையாடுவது எந்த அணியாக இருந்தாலும், விக்கெட்டை வீழ்த்தாமல் முரளி திரும்புவதில்லை, விடுவதில்லை.
அவரது மாயாஜால சுழற்பந்து சூறாவளியில் சிக்கி பெரிய பெரிய ஜாம்பவான்களே சுருண்டுள்ளனர். இலங்கை அணியை தனது சூறாவளிப் பந்து வீச்சால் தூக்கிச் சுமந்து கொண்டுள்ள முரளீதரன், ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றும் வல்லமை படைத்தவர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் உலக சாதனை படைத்தவர் ஆஸ்திரேலியாவின் ஷான் வார்னேதான். அவர் 708 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
அவரது சாதனையை முரளீதரன் முறியடிக்கும் நாளை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் தற்போது வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முரளீதரன் 700வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின்போது இந்த சாதனையை நிகழ்த்தினார் முரளீ. அவரது சொந்த ஊரான கண்டியில் இந்த டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் முரளீதரன் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். 2வது இன்னிங்ஸிலும் தனது மாயப் பந்து வீச்சால் மறுபடியும் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இரு இன்னிங்கிலும் சேர்த்து மொத்தம் 12 விக்கெட்டுக்களை வீழ்த்திய முரளீதரன், ஒரே போட்டியில் 10 விக்கெட்டுக்களுக்கு மேல் வீழ்த்தியது இது 20வது முறையாகும்.
இதன் மூலம் 700 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள முரளீதரன், ஷான் வார்னேவின் உலக சாதனையை முறியடிக்க நவம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும். நவம்பரில் இலங்கை அணி ஆஸ்திரேலியா செல்லும்போது முரளீதரன், வார்னேவின் சாதனையை அவரது நாட்டிலேயே முறியடித்து புதிய சரித்திரம் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முரளீதரன் 1992ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஆடத் தொடங்கினார். கடந்த 15 வருடங்களாக விளையாடி வரும் முரளீதரன், இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
முரளீதரன் - ஒரு பிளாஷ்பேக்:
வயது - 35.
போட்டிகள் - 113.
முதல் விக்கெட் - மெக்டெர்மாட் (1992).
100வது விக்கெட் - பிரையன் ஸ்டிராங் (1996).
200வது விக்கெட் - பென் ஹோலியாக் (1998).
300வது விக்கெட் - ஷான் போலாக் (2000-01)
400வது விக்கெட் - ஹென்றி ஒலங்கா (2001-02)
500வது விக்கெட் - மைக்கேல் காஸ்பரோவிக்ஸ் (2003-04)
600வது விக்கெட் - காலித் மசூத் (2005-06)
700வது விக்கெட் - சையத் ரஸ்ஸல் (2007)
நேற்றைய போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 193 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. மூன்று டெஸ்ட் போட்டிகளையும் வென்று தொடரையும் கைப்பற்றியது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications