புனிதப் போர் மூலம் இறப்பேன்:பின் லேடன் வீடியோவால் பரபரப்பு!
பாக்தாத்: புனிதப் போர் மூலம் நான் உயிர்த் தியாகம் செய்வேன். அப்படி தியாகம் செய்பவர்களைத்தான் நபிகள் விரும்புகிறார் என்று ஓசாமா பின் லேடன் பேசிய பேச்சு அடங்கிய வீடியோ கேசட் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா வலை வீசி தேடி வரும் அல் கொய்தா தலைவர் பின் லேடன் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் ஆப்கான் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக ஒரு கருத்தும், இறந்து விட்டதாக இன்னொரு தகவலும் உள்ளன.
![]() |
அவர் உயிருடன் இல்லை என்பதற்கு ஆதாரமாக சமீப காலமாக பின் லேடனின் வீடியோ காட்சி எதுவும் வெளியாகாததை, அவர் இறந்து விட்டார் என்று கூறுபவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.
பின் லேடன் இறந்து விட்டார் என்று கூறப்படும் வாதம் வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்க செனட் சபையில் சமீபத்தில் லேடனின் தலைக்கு வைத்த விலையை ரூ. 200 கோடியாக அதிகரித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், பின்லேடன் அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு மத்தியில லேடன் பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 40 நிமிடங்கள் ஓடும் அந்த கேசட்டில் பின்லேடன் 1 நிமிடம் மட்டுமே பேசியுள்ளார்.
அதில், கொள்கை மற்றும் மதத்துக்காக உயிர் தியாகம் செய்யும் இளைஞர்களையும், மக்களையும் தான் நபிகள் நாயகம் விரும்புகிறார். இதுவரை உயிர்ப்பலி செய்தவர்களுக்கு என்னுடைய நன்றிகள். இந்த உயிர் தியாகத்தில் ஈடுபட பலர் முன்வர வேண்டும்.
மற்றவர்களைப் போலவே நானும் புனிதப் போரில் ஈடுபட்டு உயிரத் தியாகம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் லேடன்.
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்று மட்டும் தெளிவாகிறது. காரணம், லேடனின் பேச்சு பொதுவாகத்தான் உள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் எதுவும் அவரது பேச்சில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த புதிய வீடியோவால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளதை மறுக்க முடியாது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்













Click it and Unblock the Notifications