துணை ஜனாதிபதி தேர்தல்: முஸ்லீம் வேட்பாளருக்கு இடதுசாரிகள், காங் ஆதரவு
டெல்லி:துணை ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரிகள் தேர்வு செய்யும் முஸ்லீம் வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அரசியல் தொடர் இல்லாத ஒருவரைத் தான் துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியை சாராத ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூறியுள்ளன.
இந்த வேட்பாளர் தேர்வில் முழு உரிமையையும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது.இதையடுத்து வேட்பாளர் தேர்வு குறித்து அக் கட்சியின் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இரு முஸ்லீம் வேட்பாளர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்வு செய்து வைத்துள்ளன. ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழகத்தின் துணை வேந்தர் முசிருல் ஹசன் மற்றும் வரலாற்று ஆய்வாளரும் கவிஞருமான இர்பான் ஹபீப் ஆகியோரே அவர்கள்.
இந்த இருவரில் முசிருல் ஹசனுக்கு காங்கிரஸ் கட்சியிலும் மதிப்பு உண்டு. இந்த இருவரில் யாரை கம்யூனிஸ்டுகள் தேர்வு செய்தாலும் காங்கிரஸ் கட்சி பச்சைக் கொடி காட்டத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடையே ரகசிய பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும், துணை ஜனாதிபதிக்கான வேட்பாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும்.
ஜனாதிபதி கலாமை மீண்டும் ஏற்க மறுத்ததால் முஸ்லீம்களிடையே தனது செல்வாக்கு சரிந்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது. அதை ஈடுகட்டவே கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் முஸ்லீம் வேட்பாளர் பரிந்துரைக்கப்பட்டால் அதை ஏற்க காங்கிரஸ் தயாராக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications