ஷேக் ஹசீனா திடீர் கைது
Subscribe to Oneindia Tamil
டாக்கா:வங்கதேச முன்னாள் பிரதமரும், அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனா இன்று கைது செய்யப்பட்டார்.
![]() |
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை பதவியில் இருந்தபோது தனியார் தொழில் நிறுவனத்திடம் மிரட்டிப் பணம் பறித்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் கீழ், டாக்காவின் தன்மாண்டி பகுதியில் உள்ள ஹசீனாவின் வீட்டில் இன்று போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அதிரடிப்படையைச் சேர்ந்த 300 முதல் 400 போலீஸார் வீட்டைச் சுற்றிலும் இன்று குவிக்கப்பட்டனர். அதிகாலை 4.15 மணிக்கு இந்த அதிரடி சோதனை நடந்தது. 3 மணி சோதனைக்குப் பின்னர் ஷேக் ஹசீனாவைக் கைது செய்து ஜீப்பில் ஏற்றி டாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு போலீஸார் கொண்டு சென்றனர்.
ஷேக் ஹசீனா கைது செய்யப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஏற்கனவே ஹசீனா மீது ஒரு கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications