என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக்:மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
நெய்வேலி:நெய்வேலி அனல்மின் கழகத்தில் பணியாற்றி வரும் 13 ஆயிரம் தற்காலிக ஊழியர்களும் இன்று காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
நெய்வேலி அனல் மின் கழகத்தில் 13 ஆயிரம் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு போனஸ் தொகையில் பிடித்தம் செய்வதாக நிர்வாகம் அறிவிக்கவே, அதை எதிர்த்து டிசம்பர் மாதம் போராட்டம் நடத்தினர்.
பின்னர் பிடித்த முடிவை அணல் மின் கழக நிர்வாகம் கைவிட்டது. இதையடுத்து அனைவரும் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.
இந்த நிலையில் இந்த மாதம் முதல் போனஸ் தொகையில் பிடித்தம் செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து 13 ஆயிரம் ஊழியர்களும் இன்று காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போனஸ் பிடித்தத்தை எதிர்த்து மட்டுமல்லாது, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்தால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது. அசம்பாவித நிகழ்வுகளைத் தடுக்க அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications