நாளை ஜனாதிபதி தேர்தல்- ஏற்பாடுகள் தயார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்குப் பிறகு அப்பதவியை அலங்கரிக்கப் போகிறவர் யார் என்பதை நிர்ணயம் செய்யும் தேர்தல் நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஓட்டுப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி நாளை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இடதுசாரிகள் ஆதரவுடன் பிரதீபா பாட்டீல் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவுடன் பைரான் சிங் ஷெகாவத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் மாநில சட்டசபை வளாகங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாது தங்களது சொந்த மாநிலம் அல்லது பிற மாநிலங்களிலும் வாக்களிக்கலாம். அதற்கான சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக சட்டசபை செயலாளர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 19ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் இங்கு வாக்களிக்கலாம்.

வாக்களிக்க வருபவர்கள் தங்களது அடையாள அட்டையை தவறாமல் கொண்டு வர வேண்டும். வாக்குப் பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படும். வாக்களிப்பின் ரகசியத் தன்மை பாதிக்கப்படாத வகையில் வீடியோ எடுக்கப்படும்.

தமிழகத்தில் நடைபெறும் தேர்தலுக்கான பார்வையாளர்களாக டெல்லியிலிருந்து வந்துள்ள ஸ்ரீவத்சவா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஆகியோர் செயல்படுவார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்களில் தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் கார்வேந்தன் (இருவரும் காங்கிரஸ்) ஆகியோர் சென்னையிலேயே வாக்களிக்க அனுமதி கோரியுள்ளனர்.

வாக்குப்பதிவுக்காக டெல்லியிலிருந்து 2 ஓட்டுப் பெட்டிகள் வந்துள்ளன. எம்.பிக்களுக்குப் பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏக்களுக்கு நீல நிறத்திலுமான வாக்குச் சீட்டுக்கள் அளிக்கப்படும்.

வாக்களிக்கும் மக்கள் பிரதிநிதிகள், வாக்குச் சீட்டில் 1 அல்லது 2 என்ற எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எதையும் வாக்குச் சீட்டில் அவர்கள் எழுதக் கூடாது. வேறு ஏதாவது இடம் பெற்றிருந்தால் அது செல்லாத ஓட்டாகி விடும் என்றார் செல்வராஜ்.

தமிழகத்தில் உள்ள ஒரு எம்.எல்.ஏவின் ஓட்டு மதிப்பு 176 ஆகும். ஒரு எம்.பியின் ஒட்டு மதிப்பு 708 ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+