பள்ளிகளில் செக்ஸ் கல்வி-லாலுவும் எதிர்ப்பு
டெல்லி:பள்ளி மாணவர்களுக்கு செக்ஸ் கல்வியை பாடத் திட்டத்தில் வைத்தால், அது நமது கலாச்சாரத்தை சீரழித்து விடும், நமக்கு அது சரிப்பட்டு வராது என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பள்ளிப் பாடத் திட்டத்தில் பரீட்சார்த்த முறையில் செக்ஸ் கல்வியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாஜக இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான முரளி மனோகர் ஜோஷி, பாலியல் கல்வியை பாடத் திட்டத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
பாஜகவோடு எந்த விஷயத்திலும் ஒத்துப் ேபாகாத லாலு பிரசாத் யாதவும் இந்த விஷயத்தில் ஜோஷியின் நிலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
லாலு கூறுகையில், இந்தியாவுக்கென தனி கலாச்சாரம் உள்ளது. இந்த செக்ஸ் கல்வித் திட்டம் நமது நாட்டின் கலாச்சாரத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்து விடும்.
சிறுவர்களிடம் செக்ஸ் கல்வி போகும்போது அது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும். இந்தத் திட்டம் நல்லது என்று கூற முடியாது. இது இப்போதைக்குத் தேவையில்லை. இத் திட்டத்தால் சமுதாயத்தில் மோசமான விளைவுகள் ஏற்பட்டு விடும் என்றார்.












Click it and Unblock the Notifications