தமிழக எம்.எல்.ஏக்களுக்கு ஓட்டு போட பயிற்சி
சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் நேற்று மாலை கூடி ஆலோசித்தனர். அவர்களிடம் எப்படி ஓட்டுப் போட வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது.
திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் திமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மட்டுமல்லாது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏக்கள் ரவிக்குமார், செல்வம் ஆகிேயாரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. பின்னர் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் அக்கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் தா.பாண்டியன் பேசுகையில், 6 எம்.எல்.ஏக்கள் மட்டுமல்லாது, தமிழகத்தைச் சேர்ந்த இரு இந்திய கம்யூனிஸ்ட் எம்.பிக்களும் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றார்.
இதேபோல காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் மேலிடப் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
யசோதா எம்.எல்.ஏவைத் தவிர மற்ற 34 பேரும் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
பின்னர் வீரப்ப மொய்லி கூறுகையில், இந்தத் தேர்தலின் மூலம் இந்தியக் கலாச்சாரம் வெளிப்படப் போகிறது, நாட்டின் உயர்ந்த பதவியை முதன் முதலாக ஒரு பெண் அலங்கரிக்கப் போகிறார் என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications