ஜெயலலிதாவின் கேலிக் கூத்து அரசியல்-கருணாநிதி
சென்னை:அதிமுகவினர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்ததன் மூலம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாத அரசியல் தெள்ள தெளிவாக மக்களுக்கு புரிந்துவிட்டது என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை
கேள்வி: குடியரசு தலைவர் தேர்தலில் திடீரென்று அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்தது பற்றி
பதில்: அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் கட்சியின் தலைவி வாக்களிக்கவில்லை. அப்படி ஒரு கட்சி, அப்படி ஒரு முடிவு, அப்படி ஒரு தலைவி. அப்படி ஒரு அந்தர் பல்டி அறிக்கை. அந்த முடிவு பற்றி சில பத்திரிக்கைகளின் கருத்துக்கள் இதோ.
தீக்கதிர் தலையங்கத்தில் ஊசலாட்டமும் சந்தர்ப்பவாதமும் ஜெயலலிதாவிடம் தொடர்ந்து காணப்படும் குணங்கள் தான் என்றும் பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது என்று ஆங்கிலத்தில் பழமொழி ஒன்று உண்டு. ஆனால் பூனைக்குட்டி ஆரம்பத்திலிருந்தே கருவாட்டை நோக்கியே சுற்றி வந்து மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது என்பது இப்போது தெளிவாகிவிட்டது என்று எழுதியிருக்கிறது.
ஜனசக்தி எழுதியுள்ள கட்டுரைகு தலைப்பே அரசியலில் ஜெயலலிதா ஒரு மண் குதிரை, மீண்டும் நிரூபணம். அதில் ஜெயலலிதா ஓர் ஈகோ தலைவர். மூன்றாவது அணியில் இடம் பெற்றுள்ள வட இந்திய தலைவர்கள் அதை சரிவர உணரத் தவறியதால் ஜெயலலிதா வழக்கம் போல் தன்னை யார் என காட்டிக் கொள்ளவும் தன்னை மதிக்காதவர்களை பழி வாங்கி அசிங்கப்படுத்தவும் இத்தகைய முடிவை இறுதி நேரத்தில் எடுத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர் என்று எழுதியுள்ளது.
தமிழ ஓசை நாளிதழ் அதிமுக அந்தர் பல்டி என்ற தலைப்பில எழுதியுள்ள கட்டுரையில் காதுலபூ, காட்டுல மழை, எல்லாமே தமாஷ், மகாபாரதத்தில் மங்காத்தா, அல்வா அதிர்ஷடக்காரன்- குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக அடித்த திடீர் மாற்றமும், அதற்கு அக்கட்சியின் தலைவர் ஜெயலலிதா அளித்துள்ள விளக்கமும் இந்த நாடகங்களின் பெயர்களைத் தான் நினைவு படுத்துகின்றன என்று எழுதியுள்ளது.
ஜெயலலிதாவிற்கு மிகவும் வேண்டிய நாளிதழ் வெளியிட்ட கார்ட்டூனில் 3வது அணி தலைவர்களோடு இணைந்து ஜெயலலிதா நின்று கொண்டிருக்கும் படத்தில் குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துவிட்டோம் என்று சொல்கிறார். அதற்கடுத்து அதே படத்தை வெளியிட்டு குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்து விட்டோம் என்று யார் சொன்னது என்று கூறுவதாக தெரிவித்திருக்கிறது.
என்னுடைய கருத்தை சொல்ல வேண்டுமென்றால், ஜெயலலிதா இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்காவிட்டால் தான் நான் ஆச்சரியப்படுவேன். அவரைப் பற்றி நன்கு புரிந்துள்ள நான் அவரது இந்த அறிக்கையைக் கண்டு ஆச்சரியப்படவில்லை.
கேள்வி: ஜெயலலிதா 17ம் தேதி இரவு முழுவதிலும், 18ம் தேதி மதியம் வரையிலும் அரசியல் சட்ட நிபுணர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களின் சட்ட ஆலோசனைகள் மற்றும் விளக்கங்களைப் பெறுவதில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறாரே
பதில்: ஆமாம் அவர் அப்படிதான் சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தக் கூடிய அளவிற்கு தேர்தல் ஆணையத்தின் அறிக்கை வெளிவந்து விட்டதாம். இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் உள்ளன. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியும் அல்லது எந்தத் தலைவரும் இந்தத் தேர்தலுக்காக இரவு முழுவதும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. ஏன் இந்தத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ள பிரதான கட்சிகளின் தலைவர்கள் கூட இந்த அளவிற்கு நேரம் செலவிட்டதாகத் தெரியவில்லை.
கேள்வி: ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் வேட்பு மனு பதிவு செய்யும் நாளன்று விடியற்கைலையிலேயே சென்னையை விட்டு எங்கேயோ புறப்பட்டு சென்றுவிட்டு அன்று மாலை தான் திரும்பியதாகவும் சொல்லியிருக்கிறாரே?
பதில்: சொல்றவன் சொன்னா, கேட்கிறவனுக்கு புத்தி எங்கடா போச்சு என்று தமிழிலே கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுதான் நினைவுக்கு வருகிறது. 19ம் தேதி தேர்தலுக்கு 18ம் தேதியன்று தான் சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் அழைத்து அறிவுரை கூறுவதாக இருந்ததாம். ஆனால் 17ம் தேதி தேர்தல் ஆணையத்தின் கருத்து குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதால், கூட்டத்தைக் கூட்ட முடியவில்லை என்கிறார்.
கூட்டத்தை கூட்டாவிட்டாலும் தன் கட்சியிலே உள்ள மூத்த தலைவர்களை தன் இருப்பிடத்திற்கே அழைத்து யோசனை வழங்கி இருக்கலாம் அல்லவா அதை ஏன் செய்யவில்லை. நேரிலே தான் அழைக்க விருப்பம் இல்லை வழக்கறிஞர்களோடு ஆலோசனை தொலைபேசி வாயிலாக அழைத்து அறிவுரை கூறி மற்ற சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்திருக்கலாம் அல்லவா அப்படி ஏன் தெரிவிக்கவில்லை?
கேள்வி: தேர்தல் கமிஷன் வெளியிட்ட செய்தியினால் தான் தனது கட்சி உறுப்பினர்களுக்கு தான் அறிவுரை வழங்கவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்காரே?
பதில்: தனது கட்சி தலைவியின் அறிவுரை இல்லாமலேயே அந்த கட்சியின் உறுப்பினர்கள் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களித்து இருக்கிறார்கள் என்று ஜெயலலிதா ஒப்பக் கொண்டுள்ளார். இதுவே அந்தக் கட்சிக்குள்ள பெருமை என்று தான் கூறவேண்டும். தங்கள் கட்சியின் தலைவர் சொல்லாமலே, அவரது அறிவுரை இல்லாமலே அந்தக் கட்சியின் அத்தனை உறுப்பினர்களும் நேற்றைய தேர்தலில் வாக்களித்து இருக்கிறார்கள். இதில் இருந்து தலைவி ஒரு முடிவும், உறுப்பினர்கள் ஒரு முடிவும் எடுத்துள்ளார்கள்.
இன்னும் சொல்லப் போனால் அந்த கட்சியைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரை தூக்கிக் கொண்டே வந்து வாக்களிக்கச் செய்திருக்கிறார்கள். அவரது கூற்றுப்படியே அம்மையாரின் அறிவுரை இல்லாமலே வாக்களித்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர்கள் எப்படி முடிவு செய்து கொண்டார்கள். ஒரு காலை பத்திரிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப் போல எது சரி, எது தவறு என்று அந்தக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எடுத்துச் சொல்ல அங்கே யாரும் நாதியில்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தானே அர்த்தம்.
மேலும் அதிமுக உறுப்பினர்கள் 3வது அணியிலே ஜெயலலிதா கலந்து கொண்டு எடுத்த முடிவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதும் இந்த நடவடிக்கையில் இருந்து தெளிவாகிறது அல்லவா. கட்சியே அந்த அம்மையாரின் கையை விட்டுப் போய் விட்டதா. ஜெயலலிதா 3வது அணியிலே கலந்து கொண்டு அந்த அணிக்கே தலைவி என்பதைப் போல செய்தியாளர்களிடம் முந்திக் கொண்டு பேட்டி கொடுக்கிறார்.
ஆனால் அந்த முடிவுக்கு மாறாக கட்சியின் உறுப்பினர்கள் அவரது அறிவுரை எதுவும் இல்லாமலே பாஜக ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் என்றால் இது எதனைக் காட்டுகிறது. தும்பை விட்டு விட்டு கன்றுகள் வெளியே போய்விட்டன் என்பதைத் தானே. இப்படியொரு கட்சியை நடத்துவதற்காக ஜெயலலிதா வெட்கப்பட வேண்டாமா. வேறு எந்தக் கட்சியிலாவது தலைவரின் முடிவுக்கு எதிராக உறுப்பினர்கள் இப்படிப்பட்ட ஒரு முடிவினை எடுத்திருப்பார்களா?
ஆனால், வெட்கம், மானம் உள்ள எந்த கட்சித் தலைவராவது அந்த பதவியிலே நீடிப்பார்களா? ரோஷம் உள்ள ஜெயலலிதா அவரது அறிவுரையைப் பெறாமல் அதிமுக உறுப்பினர்கள் முடிவு எடுத்ததற்கு எதிராக என்ன செய்யப் போகிறார். நாடு கேட்கிறது, மக்கள் கேட்கிறார்கள், என்ன பதில்?
கேள்வி: தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பு தான் குழப்பத்திற்கே காரணம் என்ற ஜெயலலிதாவின் குற்றச் சாட்டு பற்றி.....
பதில்: நடைபெற்று முடிந்திருப்பது இந்திய நாட்டின் குடியரசு தலைவர் தேர்தல். நடத்தியது தேர்தல் ஆணையம். அதன் முடிவு பற்றி 3வது அணியில் முக்கிய தலைவியாக உள்ள ஜெயலலிதா ஒரு குற்றச்சாட்டை எடுத்து வைத்துள்ளார். இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கே உரியது, தகுந்த பதில் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
கேள்வி: வாக்குபதிவு நாளன்று விடியற்காலையில் ஜெயலலிதா சென்னையை விட்டு புறப்பட்டு எங்கேயோ சென்று பிற்பகலில் தான் வந்ததாகக் கூறியிருக்காரே?
பதில்: அவர் ஒரு முன்னாள் முதல்வர். அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் உள்ளன. அவர் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் திரும்பினாலும் ரகசியமாக இருக்க முடியாது. ஆனால் அவரை எங்கும் வெளியிலே பார்த்ததாக எந்தத் தகவலும் கிடையாது.
கேள்வி: தலைமை தங்களை அழைக்கவில்லை என்றும் தாங்களாகவே ஓட்டுப்போட வந்ததாகவும் செங்கோட்டையன் ஒரு அறிக்கை விடுத்திருக்கிறாரே?
பதில்: வேலிக்கு ஒணான் சாட்சி என்று நீங்கள் கேட்டது இல்லையா. கட்சித் தலைவிக்கு தெரியாமலே இவர்கள் எப்படி யாருடைய ஆணையின் பேரில் வாக்களித்தார்கள் யாருக்கு வாக்களிக்கும்படி இவர்களுக்கு யார் அறிவுரை கூறியது, இவர்கள் கட்சிக்காரர்கள் காதிலே பூ சுற்றலாம், தமிழ்நாட்டு மக்கள் காதிலே இனியும் இவர்கள் பூ சுற்ற முடியாது. சரி அதிமுகவினர் தான் அவர்கள் கட்சித் தலைவியின் ஆணை இல்லாமலே வாக்களித்து விட்டார்கள்.
அவர்களது கட்சி தலைவி திடீரென்று இரவு பூராவும் வக்கீல்களோடு ஆலோசனை காலையில் திடீரென்று வெளியூர் பயணம் போய் விட்டார். இவர்களது கூட்டணிக் கட்சியான மதிமுகவின் நிலை என்ன அவர்களது கட்சித் தலைவர் என்ன ஆனார். அந்தக் கட்சியை சேர்ந்த நான்கு பேர் எப்படி வந்தார்கள் எப்படி வாக்களித்தார்கள்? அவர்களுக்கும் குழப்பம் தானா?
இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
-
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி..வைத்தியலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?குறுக்கே வந்த இளைஞர்.. போச்சே -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications