ஜெ. ஸ்டண்ட் - சந்திரபாபு நாயுடு அப்செட்
ஹைதராபாத்:குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததால் 3வது அணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது கட்சியினரிடம் ஜெயலலிதா குறித்து கடும் அதிருப்தியுடன் பேசியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதாக 3வது அணி எடுத்த முடிவுக்கு மாறாக, நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் 3வது அணி கலகலத்துப் போயுள்ளது. அதிமுகவின் இந்த செயல் குறித்து நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, இதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. இதனால் 3வது அணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது, தலைவர்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடு ஏற்படாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜெயலலிதா மீது சந்திரபாபு நாயுடு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக ஆங்கிலப் பத்திரிக்கைக்கு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்து விட்டனர் என்ற செய்தி சட்டசபையில் இருந்த நாயுடுவுக்கு பகலில் தெரியவந்ததும் கடும் அப்செட் ஆகிவிட்டாராம்.
அதிமுகவினர் வாக்களித்து வரும் செய்தி பரவியதும், ஆந்திர சட்டசபை வளாகத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் அறையில் தெலுங்கு தேச எம்.எல்.ஏக்கள் குழுமினர்.
அவர்களிடம் சந்திரபாபு நாயுடு பேசுகையில், அரசியலில் நம்பகத்தன்மை முக்கியம். செய்வது ஒன்றும், சொல்வது ஒன்றுமாக இருந்தால் அந்த நம்பகத்தன்மை கெட்டு விடும். ஏன் ஜெயலலிதா இப்படிச் ெசய்தார் என்று புரியவில்லை.
டெல்லியில் அனைவரும் எடுத்த முடிவு இது.
அவரது செயல்படும் ஸ்டைல் அனைவருக்கும் தெரிந்ததுதான். முழுமையாக தன்னிச்சையாக நடந்து ெகாண்டு விட்டார் ஜெயலலிதா. தேர்தலைப் புறக்கணிப்பது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். ஆனால் இப்ேபாது இப்படிச் ெசய்து விட்டார். அவரை இனிமேல் நம்ப முடியாது என்றாராம் நாயுடு.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியைச் ேசர்ந்த இரு எம்.எல்.ஏக்கள் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பதும் நினைவிருக்கலாம்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications