3வது அணியின் ரஷீத் மசூத் மனு தாக்கல்ஜெ, வைகோ வராதது ஏன்?
டெல்லி:துணை ஜனாதிபதி பதவிக்குப் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரஷீத் மசூத் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஆனால், இந் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக மலைச்சாமி எம்பி தான் வந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்ற 3வது அணி, முதன் முதலாக தங்கள் அணியில் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை பிரகடனம் செய்தது. சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவரும் மக்களவை உறுப்பினருமான ரஷீத் மசூத் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால், தனது அணியின் அறிவிப்பை தானே மீறி பாஜக வேட்பாளர் ஷெகாவத்துக்கு வாக்களித்தார் ஜெயலலிதா. அவரை அப்படியே பாலே செய்தார் வைகோ.
இதனால் மூன்றாவது அணி என்ற ஒன்று இன்னும் இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷீத் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அப்போது மூன்றாவது அணியின் தலைவர்கள் அனைவரும் உடனிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், இந்திய தேசிய லோக் தள் தலைவர் ஓம்பிரகாஷ் செளதாலா, ஜார்க்கண்ட் விகாஸ் கட்சியின் தலைவர் பாபுலால் மராண்டி ஆகியோர் தான் உடனிருந்தனர்.
ஜெயலிலிதாவும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் வரவில்லை. ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக அதிமுக எம்பி மலைச்சாமியும் மதிமுக எம்பி சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும் தான் வந்தனர்.
(நேற்று ஷெகாவத்துக்கு வாக்களித்த நிலையில் ஜெயலலிதாவும் வைகோவும் இதற்காக டெல்லி போவார்களா என்பது சந்தேகமே என்று நாம் காலையிலேயே தெரிவித்திருந்தோம்).
வேட்பு மனு தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங்,ஷெகாவத்துக்கு வாக்களித்த விஷயத்தில் ஜெயலலிதாவைக் குறை கூற யாருக்கும் அதிகாரம் இல்லை என்றார்.
நாயுடு கூறுகையில், தேர்தல் கமிஷனின் உத்தரவால் குழப்பம் ஏற்பட்டதால் தான் கிராஸ் வோட்டிங் நடந்தது. மற்றபடி எங்களுக்குள் பிளவு ஏதும் இல்லை என்றார் (இதே தேர்தல் கமிஷன் காரணத்தைத் தான் ஜெயலலிதாவும் கூறியிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது)
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications