திருப்பதியில் ஆண், பெண்களுக்கு தனி க்யூ
பள்ளிப்பட்டு
திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆண்கள் மற்றும் பெண்கள் இனிமேல் தனித்தனியாக தான் வரிசையில் செல்ல வேண்டும்.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சன்னிதானத்தல் தரிசனத்திற்கு வரும்போது அங்கு நிற்கும் பாதுகாவலர்கள் முரட்டுத்தனமாக அனைவரையும் பிடித்து தள்ளிவிடுவார்கள். இது சம்பந்தமாக ஏகப்பட்ட புகார்கள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வந்தன.
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து பக்தர்களுக்கு இடையூறு இல்லாதவாறு ஏற்பாடுகளை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி சன்னிதானத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக வரிசை அமைக்க முடிவுசெய்தது.
பக்தர்கள் கோவிலின் தங்கவாயில் வரை அனைவரும் ஒன்றாகத்தான் செல்ல வேண்டும். தங்கவாசலுக்கு பிறகு ஆண்கள், பெண்கள் என தனிவரிசை பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சிரமமின்றி அனைவரும் செல்ல வாய்ப்புள்ளது. நெரிசலில் பெண்களையும், குழந்தைகளையும் சிக்கமாட்டார்கள்.
இதனை சோதனை செய்யும் வகையில் நேற்று தேவஸ்தானம் இந்தமுறையை செயல்படுத்தியது. இதில் சிரமமின்றி அனைவரும் ஏழுமலையானை வணங்கினர். இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால் குடும்பத்துடன் சாமி கும்பிட வந்த ஆண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் குழந்தைகளை தவறவிடும் வாய்ப்புள்ளது என்றனர். பல மைல்கள் கடந்து ஏழுமலையானை குடும்பத்தோடு தான் தரிசிக்க வருகிறோம். இங்கு வந்தால் தனியாக பிரிப்பது முறையல்ல என தெரிவித்தனர்.
ஆண்களும், குடும்பத்தோடு வருபவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த தனிவரிசையை தேவஸ்தான அதிகாரிகள் அமல்படுத்துவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications