ஓ.பி தம்பியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை
பெரியகுளம்:முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி செல்வத்திடம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று பத்து நிமிடங்கள் விசாரணை நடத்தினர். ஆனால், சோதனை எதையும் மேற்கொள்ளாமல் திரும்பி விட்டனர்.
அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜாவின் வீடு பெரியகுளத்தில் உள்ளது.
மூன்றாந்தல் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் 6 மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரெய்டு நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று ராஜாவின் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி குலோத்துங்க சோழன் தலைமையில் ேபாலீஸார் வந்தனர்.
ராஜாவிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். பத்தே நிமிடங்களில் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். வீட்டில் சோதனை எதுவும் நடக்கவில்லை.
எதற்காக இந்த விசாரணை என்று செய்தியாளர்கள் டிஎஸ்பியிடம் கேட்டபோது அவர் பதிலளிக்காமல் சென்று விட்டார். ராஜா தரப்பிலும் விளக்கம் தரப்படவில்லை.
முன்னதாக ராஜாவின் வீட்டிலும் மாஜி மந்திரிகள் அனிதா ராதாகிருஷ்ணன், செ.ம.வேலுச்சாமி, நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரின் சொந்த ஊர்களில் உள்ள வீடுகளிலும் சென்னையில் உள்ள வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதை அந்த போலீசார் மறுத்தனர்.
பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் டீக் கடை வைத்திருந்தபோது மிகச் சாதாரண ஆளாக இருந்தவர் இந்த ராஜா.
ஆனால், அதிமுக ஆட்சியில் மளமளவென பெரும் பணக்காரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
எக்ஸ்பிரஸ் வேகம்.. 100% குதிரை பேரம்.. தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்.. இன்பதுரை போட்ட பதிவு












Click it and Unblock the Notifications