அதிமுக, விஜயகாந்த்துக்கு பாஜக பாராட்டு!
காஞ்சிபுரம்குடியரசுத் தலைவர் தேர்தலில் கலந்து கொண்டு வாக்களித்ததற்காக அதிமுகவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் பாஜக தலைவர் இல.கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி அமையுமா என்பது குறித்து இப்போதே கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வந்த இல.கணேசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், 3வது அணியினரும், அதில் இடம் பெற்றிருந்த அதிமுகவும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கூறியிருந்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் அதிமுக மனம் மாறி ஓட்டுப் பதிவில் கலந்து கொண்டு ஓட்டுப் போட்டது பாராட்டுக்குரியது.
இதன் மூலம் அதிமுகவினர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். இருப்பினும் இதை வைத்து பாஜக, அதிமுக இடையே கூட்டணி உருவாகுமா என்று கூற முடியாது. அதற்கான நேரமும் தற்போது வரவில்லை.
இதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் குடியரசுத் தலைவர் தேர்தலில் கலந்து கொண்டு வாக்களித்திருப்பது நல்ல சூழ்நிலையாகும் என்றார் இல.கணேசன்.












Click it and Unblock the Notifications