வழி மாறிச் சென்ற 4 தமிழக ஆடுகள் யார்?
சென்னை:குடியசுத் தலைவர் தேர்தலில் அதிமுக, மதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்கள் பிரதீபா பாட்டீலுக்கு வாக்களித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஷெகாவத்தை தோற்கடித்து நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராகும் பெருமையைப் பெற்றுள்ளார் பிரதீபா பாட்டீல்.
அவருக்கு ஓரிரு மாநிலங்களைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக 171 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இது திமுக கூட்டணிக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 234 ஓட்டுக்கள் உள்ளன. இதில் திமுக கூட்டணிக்கு 167 ஓட்டுக்கள் உள்ளன. அதிமுக மற்றும் மதிமுகவுக்கு 66 ஓட்டுக்கள் உள்ளன. ஒரு ஓட்டு தேமுதிகவின் விஜயகாந்த்துடையது.
திமுக கூட்டணியில் உள்ள 167 ஓட்டுக்கள் அப்படியே விழுந்துள்ளன. ஆனால் கூடுதலாக 4 ஓட்டுக்களும் பிரதீபாவுக்குக் கிடைத்துள்ளது. அதிமுக, மதிமுக கூட்டணியில் 63 பேர் ஓட்டளித்துள்ளனர். ஜெயலலிதா மற்றும் மதிமுக உறுப்பினர்கள் 2 பேர் ஆகிய 3 பேர் மட்டும் வாக்களிக்கவில்லை. விஜயகாந்த் ஓட்டுப் போட்டுள்ளார்.
பிரதீபாவுக்கு தற்போது கிடைத்துள்ள நான்கு கூடுதல் ஓட்டுக்களும் அதிமுக, மதிமுகவிலிருந்துதான் வந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் அதிமுக தரப்பில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.
யார் அந்த நான்கு கருப்பு ஆடுகள் என்ற கேள்வி படு வேகமாக அதிமுக முகாமில் பரவியுள்ளது. இதற்குப் பேசாமல் ஓட்டுப் போடப் போகாமலாவது இருந்திருக்கலாம் என்றும் அதிமுகவினர் முனுமுனுத்துக் கொள்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications