கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேருக்கு ஜாமீன்
கோவை:கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முதன் முதலாக இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் அல் உம்மா தலைவர் பாஷா, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆகஸ்ட் 1ம் தேதியன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் முதல் முறையாக 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
122வது குற்றவாளியான நெளசத், 123வது குற்றவாளியான சர்தார் ஆகியோருக்கு நேற்று கோவை தனி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்கும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி உத்திராபதி தெரிவித்துள்ளார்.
இருவரும் தலா ரூ. 10,000 ரொக்க உத்தரவாதம் செலுத்தி ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார். இருவரும் வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு குறித்து பத்திரிக்கைகள், டிவிகள் ஆகியவற்றுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி பலமுறை ஜாமீன் கோரியும் நீதிமன்றம் அளிக்கவில்லை. இந்த நிலையில் முதல் முறையாக இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications