கொள்கை குழப்பத்தில் 3வது அணி, பாஜக: நல்லகண்ணு
செங்கோட்டை:
- இசக்கிராஜன்
தேசிய ஜனநாயகக் கூட்டணியும், 3வது அணியும் பெரும் கொள்கைக் குழப்பத்தில் இருப்பதையே குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு காட்டுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய பொலிட்பீரோ உறுப்பினருமான நல்லகண்ணு கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு வந்த அவர் தட்ஸ்தமிழுக்காக அளித்த சிறப்புப் பேட்டி:
![]() |
குடியரசுத் தலைவர் தேர்தலை ஏதோ பஞ்சாயத்துத் தேர்தலைப் போல 3வது அணியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சிறுமைப்படுத்தி விட்டன.
இவர்களின் பொய் மற்றும் அவதூறிப் பிரசாரத்தை மீறி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பிரதீபா பாட்டீல் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், எதிர்க்கட்சிகளின் பிரசாரம் வீணாகி, இவர்களது செயல் அம்பலமாகியுள்ளது.
அதிமுக தலைமையிலான 3-வது அணி செல்வாக்கையும், கொள்கையையும் இழந்து மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுள்ளது இத்தேர்தல் மூலம் தெளிவாகியுள்ளது. பாஜக கூட்டணியைச் சேர்ந்தவர்களும் கடைசி நேரத்தில் பிரதீபா பாட்டீலுக்கு வாக்களித்துள்ளனர்.
இதன் மூலம் இந்த அணிகளின் கொள்கையற்ற நிலைப்பாடு தெரிந்து விட்டது. தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. இனிமேலாவது தமிழக மக்கள் கொள்கை அடிப்படையில் சிந்திக்க வேண்டும்.
மணல் கொள்ளையை எந்த வகையிலும் அனுமதிக்க கூடாது. அது நம்முடைய ஜீவாதாரங்களை சீர்குலைத்து விடும். மணல் என்பது நீரை சேமித்து வைக்க கூடியது. அந்த மணலை எல்லாம் அள்ளி விட்டால் நீர் நிலைகள் அனைத்தும் கெட்டுவிடும். கூட்டு குடிநீர் திட்டத்திற்கான திட்டங்கள் அனைத்தும் சீர்குலைத்து விடும்.
மணல் கொள்ளைகளை தடுப்பதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இந்திய கம்யூ கட்சி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவது மட்டுமல்ல இங்கேயும் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதை எதிர்த்து இந்திய கம்யூ கட்சி தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டத்திலும் போராட்டம் நடத்தி வருகிறது.
ரியலைன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் சிறு வணிகத்தில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் என்றார் நல்லகண்ணு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications