பிரதீபா பதவியேற்பு - ஏற்பாடுகள் தீவிரம்
டெல்லி:நாட்டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ள பிரதீபா பாட்டீல் வருகிற புதன்கிழமை டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீல் அபார வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 13வது குடியரசுத் தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.
![]() |
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு பெண் குடியரசுத் தலைராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் வரலாறு படைத்துள்ள பிரதீபா பாட்டீல், குடியரசுத் தலைவராக பதவியேற்பதற்கான விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வருகிற புதன்கிழமை பாரம்பரிய முறைப்படி குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் பிரதீபா பாட்டீல் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார். அவரை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்று மைய மண்டபத்துக்கு அழைத்துச் செல்வர்.
அங்கு பிரதீபா பாட்டீலுக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார்.
அதையடுத்து குடியரசுத் தலைவர் என்ற முறையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதீபா பாட்டீல்.
அதன் பின்னர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு முறைப்படியான வழியனுப்பு விழா நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications