துணை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார் ஷெகாவத்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டார் ஷெகாவத். அவருக்கு பாஜக கூட்டணி மட்டுமே ஆதரவு தெரிவித்தது. 3வது அணி கடைசி வரை ஆதரவு தெரிவிக்கவில்லை.
![]() |
இருப்பினும் 3வது அணியில் இடம் பெற்றிருந்த அதிமுகவும், மதிமுகவும் கடைசி நேரத்தில் ஜெயலலிதா அடித்த அந்தர் பல்டியால், ஷெகாவத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அப்படியும் கூட அதிமுக மற்றும் மதிமுகவைச் சேர்ந்த நான்கு பேர் பிரதீபாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
தேர்தலில் தோல்வியைத் தழுவிய ஷெகாவத் தனது துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக பிரதீபா பாட்டீலுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் ஷெகாவத்.
பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற ஷெகாவத் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் வழங்கினார்.
ஷெகாவத், கலாமிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தில், எனது பதவிக்காலத்தில் உங்களிடமிருந்து நான் பெற்ற ஆலோசனைகளுக்கும், நீங்கள் அளித்த ஒத்துழைப்புக்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியிருந்தார் ஷெகாவத்.
அதன் பின்னர் தனக்கு வழங்கப்பட்டிருந்த அரசு காரை குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே ஒப்படைத்தார். பிறகு தனது காரில் வீடு திரும்பினார்.
முன்னதாக ஷெகாவத் வெளியிட்ட அறிக்கையில், எனது தோல்வியை நான் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஏழைகள் உயர்வுக்காகவும், சிலரால் தங்களது உரிமைகளை இழந்தவர்கள் அவர்களது அடிப்படை உரிமைகளை கெளரவத்துடன் பெறவும் தொடர்ந்து பாடுபடுவேன்.
நான் பணியாற்றிய காலம் முழுவதும் நாட்டு மக்கள் அளவிட முடியாத அன்பும், ஆதரவும் அளித்ததற்காக நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
எனக்கு வாக்களித்த அனைத்து எம்.பிக்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிக்கையாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார் ஷெகாவத்.
துணை குடியரசுத் தலைவர் பதவியை ஷெகாவத் ராஜினாமா செய்த பின்னர் அவரை அவரது வீட்டில் பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications